டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் டிரைவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற 2 மர்ம மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-08-21 05:08 GMT
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் மெயின் ரோட்டை சேர்ந்த தம்பா பிள்ளை மகன் சண்முகம் (49). இவர் முத்தாரம்மன் கோவிலில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர் அலறியவாறு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி தப்பி சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தஅவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை அரிவாளால் வெட்டிய நபர்கள் யார்? காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தாரம்மன் கோவில் டிரைவர் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News