தூய்மை பணியாளர்கள் சுகாதார பெண் தன்னார்வலர்கள் உட்பட ஓட்சா கூட்டமைப்பு போராட்டம்
மயிலாடுதுறையில் நிலுவை தொகுப்பூதியம், நிலுவை ஊக்கத்தொகை, மருத்துவ காப்பீடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓட்சா கூட்டமைப்பின் சார்பில் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், சுகாதார ஊக்குனர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆகியோர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் நிறுவனத் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்தப் போராட்டத்தில் ஓட்சா கூட்டமைப்பு மாநில தலைவர் லட்சுமணன், மாநில பொருளாளர் கிரிஷா, மாநில செயலாளர் கடலூர் செல்வராஜ், உட்பட நூற்றுக்கு மேற்ப்புடர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊக்குனர்களுக்கு ஏழு மாதங்களாக வழங்கப்படாத தொகுப்பூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீருடை மற்றும் பணி பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும், தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் கழிப்பறை கட்ட ஏற்பாடு செய்த சுகாதார உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊக்க தொகையை வழங்க வேண்டும், 2000 ஆம் ஆண்டுக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்களுக்கு ரூ.2000 ஊதியம் வழங்கி பதிவேடு துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.