தாழையூத்துபட்டியில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கல்குவாரியில் தண்ணீர் டேங்கர் லாரியை இயக்கியதால் கவிழ்ந்து விபத்து. லாரி டிரைவர் உயிரிழப்பு.
தாழையூத்துபட்டியில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கல்குவாரியில் தண்ணீர் டேங்கர் லாரியை இயக்கியதால் கவிழ்ந்து விபத்து. லாரி டிரைவர் உயிரிழப்பு.
தாழையூத்துபட்டியில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கல்குவாரியில் தண்ணீர் டேங்கர் லாரியை இயக்கியதால் கவிழ்ந்து விபத்து. லாரி டிரைவர் உயிரிழப்பு. சீர்காழி மாவட்டம், ஆயங்குடிபள்ளம் காலனி தெருவை சேர்ந்தவர் சுதாகர் வயது 38. இவர்,கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாழையூத்துப்பட்டி பகுதியில் செயல்படும், ஸ்ரீ செல்வ விநாயகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி நிறுவனத்தில் கடந்த நான்கு வருடமாக தண்ணீர் டேங்கர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 10 மணி அளவில், வழக்கம் போல் பாறைகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக டேங்கர் லாரியில் தண்ணீரை நிரப்பி கொண்டு சென்று உள்ளார். பின்னர் கல்குவாரியில் இருந்து டேங்கர் லாரியை இயக்கிக்கொண்டு மேலே வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்தில் துடி துடித்து சுதாகர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த சுதாகரின் மனைவி தாரணி வயது 36 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முறையாக உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், லாரியை இயக்க சொன்னதால், ஸ்ரீ செல்வ விநாயகா ப்ளூ மெட்டல் நிறுவனத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, தங்கவேல், சக்திவேல், கந்தசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் உயிரிழந்த சுதாகரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க.பரமத்தி காவல்துறையினர்.