திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

Update: 2024-08-21 12:58 GMT
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. செங்குந்தர் கல்வி குழுமத்தின் தலைவர் ஜான்சன்ஸ் T.S.நடராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் பேராசிரியர் A.பாலதண்டபாணி அவர்கள் இம்முகாமை தொடங்கி வைத்தார். பொருளாளர் M.K.தனசேகரன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் தொடர்பு இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு, செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் R.சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் டாக்டர்.S.விஜய்குமார் (மெடிக்கல் சூப்ரிண்டன்ட் தி ஐ ஃபவுண்டேஷன், ஈரோடு) கலந்துகொண்டு மாணவர்களுக்கு கண் பாதுகாப்பு பற்றி பேசினார். கைபேசி அதிகம் பயன்படுத்துவதால் கண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. தற்போதுள்ள குழந்தைகள் சிறு வயதிலேயே கண்கள் பாதிக்கப்பட்டு கண் அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்கு கண்கள் பாதிக்கப்படுகிறது அதனால் கண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை இளைஞர் செங்சிலுவை சங்கம், மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.

Similar News