விதிமுறைகளை மீறி கனரக வாகனங்கள் இயக்கம் .டிராபிக் ஜாமால் பள்ளி மாணவர்கள் பாதிப்பு 

பள்ளி செல்லும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுகள் அவதி

Update: 2024-08-21 16:30 GMT
விதிமுறைகளை மீறி கனரக வாகனங்கள் இயக்கம் .டிராபிக் ஜாமால் பள்ளி மாணவர்கள் பாதிப்பு  தாராபுரம் நகரில் விதிமுறைகளை மீறி கனரக வாகனங்களை நிறுத்தி சரக்கு இறஙகுவதால்போக்குவரத்து பாதிக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். தாராபுரம் நகரின் வர்த்தக பகுதியான பூக்கடை கார்னர் மற்றும் ஜவுளிக்கடை வீதி கார்னர் பகுதியில் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் மூலம் வணிக நிறுவனங்களுக்கு  சரக்குகள் இறக்கப்படுகிறது. . இதனால் காலை நேரங்களில் பள்ளி பஸ்களில் மாணவர்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அண்மையில் பூக்கடை கார்னர்பகுதியை ஒரு வழி பாதையாக அறிவித்து என்.என் பேட்டை ரோட்டில் டிவைடர் வைக்கப்பட்டது. மேலும் பூக்கடைக்காரனரில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் பாதையும் வடக்கே உள்ள ஜவுளிக்கடை வீதி நோக்கி செல்லும் சாலையும் ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டது.  போக்குவரத்துக் காவல்துறை காலை நேரங்களை தவிர்த்து காலை 10 மணிக்கு மேல் கனரக வாகனங்கள் மூலம் வணிக நிறுவனங்களுக்கு தேவையான சரக்குகள் மற்றும் பொருள்களை இறக்குவதற்கு அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது அந்த நடைமுறை விதிகளை மீறி காலை நேரத்தில் கனரக வாகனங்கள்  நிறுத்தி சரக்குகளை இறக்கி  பள்ளி வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கையும் அபராதமும் விதித்து வந்தனர். இதையெல்லாம் கனரக வாகன ஓட்டிகள் கருத்தில் கொள்ளாமல் மீண்டும் காலை நேரங்களில் சரக்கு வாகனங்களை நிறுத்தி வணிக நிறுவனங்களுக்கு தேவையான சரக்குகள் மற்றும் பொருள்களை இறக்கி வருகின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் நீண்ட நேரமாக பள்ளி வாகனங்களில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்து வருகின்றனர். போக்குவரத்து போலீசார் காலை 9 மணிக்கே பணிக்கு வருகின்றனர்.பள்ளி நேரங்களில் இது போன்று கனரா வாகனங்கள் நுழையும் இடங்களில் போக்குவரத்து போலீசாரை காலை 8 மணிக்கே நியமித்து கனரக வாகனங்கள் காலை நேரங்களில் ஒரு வழிப்பாதையில் வராமல் தடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது படம்சரக்கு படவிளக்கம் தாராபுரம் பெரியகடை வீதியில் காலை பள்ளி நேரத்தில் வாகனங்களிலிருந்து சரக்குகள் இயக்கப்படுவதால் டிரபிக்ஜாம் ஏற்படுகிறது.

Similar News