உங்களைத் தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் கள ஆய்வில் ஆட்சியர் அதிரடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்க அரசாணை பிறப்பித்தார்
திருப்பத்தூர் மாவட்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் கள ஆய்வில் ஆட்சியர் அதிரடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்க அரசாணை பிறப்பித்தார் திருப்பத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டம் சின்னாரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 6 கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சின்னாரம்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் நேரடியாக சந்தித்து, தங்கள் பகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் அப்போது அப்பகுதி மக்கள் மயான வழித்தடம் வேண்டும் என்றும் மேலும், இவ்வூராட்சியில் உள்ள 5 கிராமங்களிலும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் ஒரு கிராமமான காராகான் கோட்டை பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடி தண்ணீர் வருவதில்லை. இத்திட்டத்தின் பயன்பாடு எங்கள் கிராமத்திற்கும் வழங்கிட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் பராமரிக்கும் பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு மேற்கொண்டார். மற்றும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பொதுமக்களை சந்தித்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார் அப்போது சின்னாரம்படி நாயக்கானூர் பகுதியை சேர்ந்த சின்னகிருஷனன் இவரது மகன் சீனிவாசன் வயது35 படுத்த படுக்கையில் இருக்கும் இவருக்கு ஆதார் கார்டு இல்லாமல் உடல் ஊனமுற்றோர் உதவி தொகை பெறாமல் இருப்பை அறிந்து உடனடியாக சம்பவயிடத்திலேயே உதவி தொகை மூன்று ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பித்து ஆடர் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிட தக்கது