அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு பெண் தற்கொலை!.
குலசேகரப்பட்டினத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலசேகரப்பட்டினத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்பவரது மனைவி வாசுகி (43). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் அளவுக்கு அதிகமாக பிரஷர் மாத்திரைகளை சாப்பிட்டாராாம். இதையடுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) பிரேமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்..