நான் தூய்மை பணியை மேற்கொண்டேன்: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

தூத்துக்குடியில் நான் தூய்மை பணியை மேற்கொண்டேன்: அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.

Update: 2024-08-22 06:58 GMT
பள்ளி படிப்பின் போது தூய்மை பணியை நான் மேற்கொண்டேன் என்று விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி மில்லா்புரம் புனித மாியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாளாளா் சகோதரர் ஆரோக்கியம் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துைற அமைச்சர் கீதாஜீவன் 148 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கி பேசுகையில் "தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழகம்முழுவதும் உள்ள மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதில் பேசுகையில் கல்வி மருத்துவம் இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசுவார் கல்வித்துறைக்கென்று அதிக நிதிஓதுக்கீடு செய்து எல்லோரும் கல்வியின் மூலம் உயர வேண்டும். என என்னுவார், அதே போல் மருத்துவ துறையை பொறுத்தவரை எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தில் அதை கருத்தில் கொண்டு செயல்படுவார் அது மட்டுமின்றி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் எல்லா துறைகளுக்குமே பொற்காலம் தான் பள்ளி படிப்பின் போது உயர் பதவிகளுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.

Similar News