பட்டா வழங்கக்கோரி நகர மன்ற தலைவரிடம் மனு அளித்தனர்
நகராட்சிக்குட்பட்ட பத்தாவது வார்டு பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்க மனு அளித்தன.ர்;
10 வது வார்டு உப்புத்துறைபாளையம் பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கக்கோரி நகர்மன்ற தலைவரிடம் மனு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு பகுதி உப்புத்துறைபாளையம் ஆதிதிராவிடர் தெரு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வசித்து வரும் பொதுமக்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கப்படாதால் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நகர மன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் நகர மன்ற உறுப்பினரின் பரிந்துரையின்படி அப்பகுதி மக்களின் கோரிக்கையை மனுவை நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன்,பெற்றுக்கொண்டார். மேலும் இந்நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர்கள் செலின் பிலோமினா, இராஜாத்தி பாண்டியன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் A.M. யூசுப், வார்டு செயலாளர் பீர் முகமது, வார்டு பிரதிநிதி நவநிதன்,மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .