மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
லைன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் விளையாட்டு போட்டி;
லைன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் லைன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் லைன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவு கோகோ போட்டியில் கலந்து கொண்டனர். அதில் இரு அணிகளும் வெற்றி பெற்று திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் அரிமா. டாக்டர். மா. தங்கராசு மற்றும் அரிமா அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் கேடயம் வழங்கி பாராட்டினர்.