ஆழ்கடலில் கணவாய் மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும்!
ஆழ்கடலில் கணவாய் மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும் : மீனவர்கள் கோரிக்கை!
தூத்துக்குடி கடல் பகுதியில் சிலிண்டர் உதவியுடன் ஆழ்கடலில் மூழ்கி கணவாய் மீன் பிடிப்பதை தடைசெய்ய வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து வேம்பார் பகுதி தூய ஆவி நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தினர், தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேம்பார் பகுதியில் சுமார் 400 குடும்பங்கள், தூண்டில் வைத்து கணவாய் மீன்களை பிடித்து வருகிறோம். தற்போது, தடை செய்யப்பட்ட சிலிண்டரை உடலில் கட்டிக்கொண்டு ஆழ்கடலில் மூழ்கி கணவாய் மீன்பிடிக்கும் தொழில் அதிகரித்து வருகிறது. இவர்கள், ஆழ்கடலில் சென்று கணவாய் மீன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் பிடித்து வருவதால், கடல் வளம் அழிக்கப்படுகிறது. மேலும், தூண்டில் மூலம் மீன்பிடிக்கும் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, தடைசெய்யப்பட்ட சிலிண்டர் மூலம் ஆழ்கடலில் மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.