ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு ஒன்றியம் அத்திபட்டு ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் வளாகத்தில் யாகசாலை பூஜையில் , சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கலசங்களில் வைக்கப்பட்ட தீர்த்தங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, சிவாச்சாரியார் புனித கலசங்கள், ஊர்வலமாக எடுத்துச் சென்று, திருக்கோயில் திருக்கோயில் கோபுரத்தில் சூரிய பூஜை செய்து வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது மங்கள இசை வாத்தியங்களுடன் மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு இதனை தொடர்ந்து திருக்கோயில் வளாகத்தில் திரண்டு இருந்த திரளான பக்தர்களுக்கு மகா கும்பாபிஷேக புனித நீர் ஊற்றப்பட்டது இதனைத் தொடர்ந்து மூலவர் வர சித்தி விநாயகப் பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதனை தொடர்ந்து மகா தீப ஆராதனையும் வர சித்தி விநாயகப் பெருமானுக்கு காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் ரீனா மேகநாதன் ஏற்பாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானங்களை வழங்கினார்கள்.