சேத்துப்பட்டில் ஓசோன் மண்டல பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.

ஆரணி, சேத்துப்பட்டில் ஓசோன் மண்டல பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-09-19 23:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திரவனம் நன்றி அறக்கட்டளை மற்றும் சென்னை சஞ்சு மகளிர் நல அமைப்பு சார்பில் உலக ஓசோன் தினம் முன்னிட்டு பொதுமக்களிடையே ஓசோன் மண்டல பாதுகாப்பு குறித்து விழிப்புணர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் நன்றி அறக்கட்டளை இயக்குனர் ஜோசப் ஆபிரகாம் தலைமை தாங்கினார். சஞ்சு மகளிர் நல அமைப்பு இயக்குனர் சாந்தி சாக்ரடீஸ், சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மங்களம் ரமேஷ்,சரவணன், கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் சுதா முருகன், திமுக நகர செயலாளர் இரா.முருகன் ஆகியோர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஊர்வலம் செஞ்சி சாலை, ஆரணி சாலை, காமராஜர் பேருந்து நிலையம், போளூர் சாலை, வந்தவாசி சாலை என முக்கிய சாலைகள் வழியாக மரங்களை நடுவோம், ஓசோன் மண்டலத்தை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைகளில் பதாகைகள் ஏந்தி மகளிர் சுய உதவி குழுவினர் சென்றனர். அதனைத் தொடர்ந்து ஆரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழிப்புணர் கூட்டம் நடைபெற்றது இதில் ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பது குறித்தும், கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு மழை பெறுவோம், வளம் பெறுவோம், ஓசோன் மண்டலத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்தனர். பேரணியில் இந்திர வனம், போளூர்,சேத்துப்பட்டு உள்பட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.

Similar News