குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் துவக்கம்
மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் மயிலாடுதுறை குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் துவங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் மயிலாடுதுறை குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் இன்று துவங்கியது. புனித சின்னப்பர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக நடத்தப்படும் இந்த போட்டி துவக்க விழாவில் தேசியக்கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உமாநாத் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பால்ராஜ் ஏற்றினர். தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களின் கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாநில தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியை கையில் ஏந்தி மைதானத்தை வலம் வந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. பின்னர் அனைத்து வகையான ஓட்ட போட்டிகள், விளையாடுகிறார்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மாணவர்கள் 800க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு உடனுக்குடன் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.