புராண வரலாறு கொண்ட சுவர்ணபுரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்
இந்திரன் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட குற்றத்திற்காக வருந்தி வழிபட்டு பரிகாரம் பெற்ற தலமாகவும், திருஞானசம்பந்தரால் ஒரு பதிகமும் திருநாவுக்கரசரால் இரண்டு பதிகங்களும் என மூன்று பதிகங்கள் அருளப்பெற்ற செம்பனார்கோவிலில் உள்ள பழமை வாய்ந்த மருவார்குழலி உடனுறை சுவர்ணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
:- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற மருவார்குழலி உடனுறை சுவர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பிரம்மன் பூஜித்து படைப்பு தொழில் கைவிரப் பெற்றார். இரதிதேவி வழிபட்டு தன் கணவனாகிய மன்மதனை பெற்றாள், இந்திரன் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட குற்றத்திற்காக வருந்தி வழிபட்டு பரிகாரம் பெற்ற தலமாகும், 12 சூரியர்கள், ஸ்ரீ லட்சுமி தேவி, சுவர்ணரோமன் ஆகியோர்களால் பூஜிக்கப்பட்ட தலமாகும், மேலும் திருஞானசம்பந்தரால் ஒரு பதிகமும் திருநாவுக்கரசரால் இரண்டு பதிகங்களும் என மூன்று பதிகங்கள் அருளப்பெற்ற சிறப்புடையது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலின் முன்பு யாகசாலை கொட்டகை அமைக்கப்பட்டு கடந்த 18 ஆம் தேதி பூர்வாங்க பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் லட்சுமி ஹோமத்துடன் தொடங்கி மறுநாள் யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து முதல் கால யாகசால பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று ஆறாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணஹூதி செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கணங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான குடும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பனர்கள் வேதங்கள் ஓத தருமபுரம் ஆதீனம் மடாதிபதி, செங்கோல் ஆதீனம் ஆகியோர் முன்னிலையில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.