ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்: பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 2 நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் தொடங்கியது. வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும், கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், வளர்ச்சித் துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிறதுறை பணிகளை முற்றாக கைவிட வேண்டும் தமிழக முதல்வர் அளித்துள்ள வாக்குறுதிகளில் ஒன்றான கடந்த கால வேலை நிறுத்த நாட்களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாநிலம் தழுவிய 2 நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று தொடங்கியது. இதன் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.