உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக வெற்றிக்கழக கொடியை வைத்து வழிபாடு செய்த திரைப்பட நடிகர் சௌந்தரராஜா
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக வெற்றிக்கழக கொடியை வைத்து வழிபாடு செய்த திரைப்பட நடிகர் சௌந்தரராஜா
உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தமிழக வெற்றிக்கழக கொடியை வைத்து வழிபாடு செய்த திரைப்பட நடிகர் சௌந்தரராஜா தமிழக வெற்றிக் கழகக் கொடியை சென்னையில் நேற்றைய தினம் நடிகர் விஜய் அறிமுகப்படுத்திய நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இன்று நடிகர் சௌந்தரராஜா அம்மனின் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்வதற்காக வருகை தந்தார். முன்னதாக அம்மன் சன்னதி வாசலில் கொடியைப் பிடித்து அசைத்தவாறு அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அண்ணன் விஜய் அவர்கள் வெளியிட்டார்.அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக எனது சொந்த ஊரான மதுரையில் அந்த கொடியை கொண்டு வந்து விஜய் அவர்களின் பெயர் மற்றும் அந்தக் கொடியை அன்னை மீனாட்சி காலடியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட பிறகு சென்னையில் அவரிடம் கொண்டு கொடுக்க உள்ளேன் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.தற்போது ஆட்சி செய்கின்ற அனைத்து முதல்வர்களும் தங்களுடைய முதல் அரசியல் மற்றும் மாநாடு என அனைத்திலும் இடம்பெற்று இருப்பது மதுரை தான். இந்த மதுரைக்கு அப்பேர்ப்பட்ட மாபெரும் சிறப்பு இருக்கின்றது.அரசியல் மற்றும் சினிமாவிற்கு மிகப்பெரிய ஒரு பந்தமாக இந்த மதுரை இருந்து வருகிறது.அப்படிப்பட்ட ஒரு புண்ணிய பூமியில் தமிழக வெற்றி கழகத்தினுடைய கொடியை அன்னை மீனாட்சி அம்மனின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்து ஆசி பெற உள்ளேன்.நடிகர்களை தனித்து பார்க்காதீர்கள் எல்லோரும் அரசியலுக்கு வரலாம். கொட்டுக்காளி திரைப்படம் குறித்த கேள்விக்கு ?? நடிகர் சூரி என்னுடன் கூடப்பிறக்காத அண்ணன் நானும் அவரும் 10 படங்களுக்கு மேல் ஒன்றாக இணைந்து பணியாற்றி இருக்கின்றோம். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கக்கூடிய அவருடைய உழைப்பின் பயனாக தற்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறார் மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரையில் சொல்ல வேண்டிய கதைகள் சுவாரசியமான கதைகள் நிறைய உள்ள நிலையிலும் நிறைய கதை களத்தை மையமாக வைத்து மதுரை சார்ந்த திரைப்படங்கள் வருகிறது தமிழக வெற்றிக் கழகத்தில் யாரெல்லாம் இணைவார்கள் என்ற கேள்விக்கு ? இன்றைய சமுதாயம் நல்லா இருக்கணும் மக்கள் கஷ்டங்கள் இல்லாமல் வசதியாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் நிச்சயம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என நினைக்கின்றேன் சிறுவர்கள் வைத்து தமிழக வெற்றி கழகம் கிடையாது கிட்டத்தட்ட 40 வயதுடைய இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் 2009க்கு மேல் நற்பணி மன்றம் அவர் ஆரம்பித்த பிறகு மக்கள் இயக்கமாக மாறி தற்போது அரசியல் இயக்கமாக மாறி இருக்கிறது நிச்சயமாக வரும் காலங்களில் தெரியும் எல்லா அரசியல் கட்சிகளிலும் முன்னதாக இளைஞர்கள் தான் இருந்திருப்பார்கள் அரசியலுக்கு வந்து விட்டால் பயம் எல்லோருக்கும் இருக்கும் குறிப்பாக பொறுப்புள்ள பயம் தயக்கமெல்லாம் கிடையாது தெளிவாக மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகளாக யோசித்து தெளிவான ஒரு முடிவை எடுத்திருக்கிறார் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் ஆழமாக சிந்தித்து தான் எடுப்பார் நிச்சயம் பிரச்சனைகள் வரத்தான் செய்யும் அதற்கு விஜய் பயப்பட மாட்டார் கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் குறித்த கேள்விக்கு ?? அண்ணன் விஜயகாந்த் அவருடைய ரசிகர் மன்றத்தில் இருந்தவன் நான் அவருடைய நடிப்பு ரொம்ப பிடிக்கும் நிறைய நபர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் அரசு அலுவலர்கள் முதல் காவல்துறையினர் வரை அவரை இன்ஸ்பிரேஷன் ஆகக் கொண்டுதான் வரை இருக்கின்றார்கள் செந்தூரப்பாண்டியை (விஜயகாந்தை)மீண்டும் பார்க்க நாங்கள் காத்திருக்கின்றோம் மாநாடு நடத்துவதற்கு மதுரை கிடைக்காதது வருத்தம் தான் நிறைய துன்பங்கள் போராட்டங்கள் தடங்கள் வரத்தான் செய்யும் அதை பொறுமையாக அறிவுப்பூர்வமாக கிடைப்பதை எடுத்துக் கொண்டு அதில் சிறந்ததாக விஜய் அண்ணன் கொடுப்பார் என நம்புகின்றேன் என தெரிவித்தார்.