பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து திருட்டு - இருவர் கைது
கோவில்பட்டியில் கல்லூரி பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து திருட்டு - இருவர் கைதுசெய்தனர்.
கோவில்பட்டியில் பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து பாத்திரங்களைத் திருடிச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வரும் இவர் விடுமுறையின்போதுதான் வீட்டிற்கு வருவாராம். இந்நிலையில் இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டஅவரது உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பாத்திரங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர் முகில்நிதி அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட பாரதி நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த பிச்சைக்கனி மகன் ராஜ்குமார்(36) மற்றும் வேலாயுதபுரம் கீழத் தெருவைச் சேர்ந்த சோலையப்பன் மகன் சரவணன்(43) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.