கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கல்

வழங்கல்

Update: 2024-08-24 04:53 GMT
பகண்டைகூட்ரோட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ., பணி ஆணை வழங்கினார்.பகண்டைகூட்ரோடு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பி.டி.ஓ., சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், நிர்வாகி சாமிசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பங்கேற்று, பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கி பேசியதாவது: கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கான தொகை முழுதும் மாநில அரசின் நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. மிகப்பெரிய நிதி நெருக்கடியிலும் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை வழங்கி உள்ளார். பணி ஆணை பெற்றவர்கள் உடனடியாக வீடு கட்டும் பணியை துவங்க வேண்டும். முதற்கட்டமாக ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த 744 பயனாளிக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு கட்டங்களாக 2,500 பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் துணை பி.டி.ஓ., செந்தில்குமார், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News