ஆரணி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம்

ஆரணி சட்டமன்ற தொகுதியின் செயலாளர் தலைவர், மகளிர் செயலாளர், தலைவர் பதவிக்கான நியமனம் செய்ய மனு பெறுதவற்கான கூட்டம்;

Update: 2024-08-24 05:43 GMT
ஆரணி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டசெயலாளர் ஆ.வேலாயுதம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் க.ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பாமக கட்சியின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, சிறுபான்மை பிரிவு மாநிலதலைவர் எஸ்.ஷேக்முகைதீன், சமூக முன்னேற்ற சங்க நிர்வாகி கே.பொன்மலை ஆகியோர் கலந்துகொண்டு ஆரணி நிர்வாகிகளிடையே விண்ணப்ப மனுக்களை வழங்கினர். மேலும் இதில் முன்னாள் ஊராட்சித்தலைவர் அரியப்பாடி பிச்சாண்டி, மாவட்டதுணை செயலாளர்கள் து.வடிவேலு, மு.மெய்யழகன், பேராசிரியர் கே.சிவா, வன்னியர் சங்க மாவட்டசெயாளர் அ.கருணாகரன், மாவட்டஅமைப்புசெயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் ஆரணி நகர செயலாளர்கள் சு. ரவிசந்திரன். சதிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News