நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ யில் ஒருவர் பலி மூன்று பேர் படுகாயம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மூன்று பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் அதில்இருவரதுஉயிர் ஊசலாடுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு மாதா கோயில் மெயின் ரோடு ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வெடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வெடி தயாரிக்கும் ப ணியில் ஈடுபட்டிருந்த திருவாவடுதுறையை சேர்ந்த கர்ணன் என்பவர் உடல் சிதைந்து உயிரிழந்தார். மேலும் கலியபெருமாள் குமார் லட்சுமணன் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குத்தாலம் தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் தற்போது நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த வெடிக்கிடங்கில் திருமண நிகழ்வு கோயில் விழாக்களுக்கு வெடி மற்றும் நாட்டு வெடிகள் தயாரித்து வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இன்று வெடி மருந்து இடிக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து குத்தாலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆய்வு. இந்த வெடி விபத்தில் கர்ணன் என்பவர் உயிரிழந்த நிலையில் லட்சுமணன் கலியபெருமாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட உள்ளதாகவும், அரசு விதிமுறைக்கு உட்பட்டு கிடங்கு செயல்படுவதாக உரிமையாளர் தரப்பில் கூறுகின்றனர். வெடி விபத்துக்கான தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவரும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.