சிவன்மலை அருகே பாம்பு கடித்து பெண் பலி

சிவன்மலை அருகே சம்பவாய் வள்ளிக்காடு தோட்டத்தை தெய்வானை(71) மற்றும் அவரது கணவர் குமாரசாமியும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றார். நேற்று இரவு தண்ணீர் தொட்டி அருகே நடந்து வரும்போது பாம்பு கடித்து விட்டது. பின்னர் காங்கேயம் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்த பின்னர் நேற்று இரவு பலியானார்.

Update: 2024-08-25 01:38 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை அருகே சம்பவாய் கிராமத்தில் வள்ளிக்காடு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து தெய்வானை மற்றும் அவரது கணவர் குமாரசாமி ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் தெய்வானை குடியிருந்த வீட்டிற்கு பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டி அருகில் நடந்து வரும் போது இடது கால் இரண்டாவது விரலில் விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு கடித்து விட்டது. இதை பார்த்த தெய்வானை உடனடியாக தனது மகன் பூபதியின் மனைவி சுசீலாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்து இருக்கிறார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சுசீலா தனது அத்தையை தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். பின்னர் தெய்வானைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இறந்த தெய்வானையின் பிரேதம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலத்தை உறவினர்களிடம் வழங்கப்படும். மேலும் இது குறித்து காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News