சட்டவிரோதமாக ஜெபக்கூட்டம் மற்றும் தொழுகைகள் நடத்துவது சம்பந்தமாக காவல் நிலையத்தில் மனு

சட்டவிரோதமாக ஜெபக்கூட்டம் மற்றும் தொழுகைகள் நடத்துவது சம்பந்தமாக காவல் நிலையத்தில் மனு;

Update: 2024-08-25 01:46 GMT
சட்டவிரோதமாக ஜெபக்கூட்டம் மற்றும் தொழுகைகள் நடத்துவது சம்பந்தமாக காவல் நிலையத்தில் மனு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் இந்து முன்னணியில் மாவட்ட செயலாளர் சங்கிலித் துறை தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது, தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் ஜெபக்கூடம் மற்றும் தொழுகைகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக வீடு வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக ஜெபக்கூடம் மற்றும் தொழுகைகள் வெள்ளி ,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான எண்ணிக்கையில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிகமான சத்தத்தில் ஒலிபெருக்கி வைத்து அப்பாவி இந்துக்களை அழைத்து வந்து கட்டாய மதமாற்றம் செய்கின்றனர் என காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

Similar News