வெள்ளகோவிலில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

வெள்ளகோவில் அருகே மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். 30ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் தமிழக ஓய்வு பெற்ற காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கின்றார்.

Update: 2024-08-25 01:54 GMT
வெள்ளகோவில் லக்கமநாயக்கன்பட்டி அருகே ஆண்டிபாளையத்தில் கொங்குநாடு ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, புதுக்கோட்டை மற்றும் வெள்ளகோவில் என மொத்தம் 3 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி வருகிற 30-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு நடைபெறுகின்றது. துப்பாக்கி சுடும் போட்டியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.பின்னர் துப்பாக்கியால் இலக்கை நோக்கி சுட்டார். தமிழ்நாடு ஷூட்டிங் அசோசியேசன், தமிழக துப்பாக்கி சுடும் பயிற்சி அமைப்புகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். டிராப், டபுள் டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் குறைந்த அளவு தூரம் கொண்ட துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. ஒரு வார கால நிகழ்வுகளில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, திருப்பூர் மாநகர கமிஷனர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 30 ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் தமிழக ஓய்வு பெற்ற காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

Similar News