காவல்துறை வாகனங்களை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்துறையின் அனைத்து வாகனங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்து காவல்துறை வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்துறையின் அனைத்து வாகனங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்து காவல்துறை வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அதனை உடனே சீர் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், வாகனங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் கனரக வாகனங்கள் (Vajra Varun) மற்றும் அதன் ஓட்டுநர்களுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை பயிற்சி அளிக்க வேண்டும். காவல்துறை வாகனங்களில் ஏற்பட்ட பழுதுகளை நீக்குவதற்கு அதன் ஓட்டுநர்கள் நன்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சிறை கைதிகளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்த காவல்துறை வாகனங்களில் அழைத்து செல்லும் நிகழ்வுகளை வாகனத்தில் சிசிடிவி கேமரா பொருத்தி அதன் மூலம் பதிவு செய்திருக்க வேண்டும். காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் குற்ற சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் தங்களது ரோந்தை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடியில் காவல்துறை வாகனங்களை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு!