ஆண்டிபட்டி அருகே கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது

அரசியல்

Update: 2024-08-25 03:54 GMT
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தார்பட்டியில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தேமுதிக சித்தார்பட்டி கிளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கேசரி, லட்டு மற்றும் இனிப்புகள் பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கி கொண்டாடினார்கள் .மேலும் இந்த நிகழ்வில் ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர் பி ராஜா, தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கே சதீஷ்குமார் ,சித்தார்பட்டி கிளைச் செயலாளர் பி முருகன், கிளை தலைவர் பி அர்ஜுனன் ,பொருளாளர் டி வேல்முருகன், துணைத்தலைவர் பி ஜெகநாதன் ,மற்றும் கிளை உறுப்பினர்கள் ஜி சுந்தரபாண்டியன், ஆர் செல்வகுமார், ஊராட்சி மெம்பர்கள் வி.கார்த்திக், சுதாகர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News