உடுமலை அருகே குளத்திற்கு முறைகேடாக தண்ணீர் திறப்பு

அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார்

Update: 2024-08-25 08:22 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த 18ஆம் தேதி முதல் இரண்டாம் மண்டல ஆண்டு பாசனத்திற்கு 4 சுற்றுக்குத் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில உடுமலை கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டுள்ள நிலையில் மருள் பட்டி கிளை கால்வாய்க்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள குளத்திற்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் இது குறித்து விவசாயிகள் கூறியதாவது . இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் திருமூர்த்தி அணையில் இருந்து மருள்பட்டி பாசன கால்வாய்க்கு தண்ணீர் வருகின்றது ஒரு சில நேரங்களில் கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் இருக்கும் நிலையில் சில தினங்களாக கால்வாயை உடைத்து தற்பொழுது குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்ததை அடைத்தனர்.பின்னர் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் கொண்டு அடைத்தனர்.இந்த நிலையில் முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்டதற்கு யார் அனுமதி வழங்கினார்கள் ,யார் முறைகேடாக தண்ணீர் திறந்தார்கள் என சம்பந்தபட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது

Similar News