லாலாபேட்டை ஒன்றிய அரசு பள்ளியில் 280 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

எம்.எல்.ஏ இரா.மாணிக்கம் வழங்கினார்;

Update: 2025-12-17 07:12 GMT
கரூர் மாவட்டம்,லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பஞ்சப்பட்டி மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி பயிலும் பிளஸ் ஒன் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 132 மாணவ, மாணவிகளுக்கும், பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 148 மாணவ மாணவிகளுக்கும் தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து லாலாபேட்டை, பஞ்சப்பட்டி, முத்தம்பட்டி தேசியமங்கலம்,கட்டாரிப்பட்டி, குப்பாண்டியூர் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு செந்தில் பாலாஜி அறக்கட்டளையின் சார்பில் வினா விடை பயிற்சி புத்தகங்களையும் வழங்கினார்.

Similar News