தொடர்ந்து விலை உயரும் மக்காச்சோளம் விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயம்

Update: 2024-08-25 08:26 GMT
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி அதிக அளவு நடைபெற்று வருகிறது இதே போல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் அம்மாச்சியாபுரம் ,குன்னூர், திருமலாபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு மக்காச்சோளம் பயிர் விவசாயம் செய்து வருகின்றனர் .மேலும் தற்பொழுது மக்காச்சோளம் விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில், பயிர் அறுவடை செய்யும் வகையில் உள்ளது. கடந்த வருடம் ஒரு குவிண்டால் ரூ 2300 முதல் ம விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் 2400 வரை விலை உயரும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர் .மேலும் கால்நடைகளுக்கு மட்டும் உணவு பொருளாக பயன்படுத்தப்பட்ட மக்காச்சோளமானது தற்பொழுது எத்தனால் தயாரிப்பில் அதிகளவு உற்பத்தி செய்ய தேவைப்படுவதால் மேலும் மக்காச்சோளத்தின் விலை ரூ 2500 வரை உயர வாய்ப்புள்ளது என்றும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவித்தனர்

Similar News