திருச்செங்கோடு அருகே உள்ள கொக்கராயன்பட்டை பகுதியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில்போதைப் பொருளுக்கு எதிரான மற்றும் போதைப் பொருளிலிருந்து இளைய சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி நடந்தது பேரணிக்கு கொக்கராயன்பேட்டை தவ்ஹீத் ஜமாத் கிளை செயலாளர் நவீன் பாஷா தலைமை வகித்தார் கொக்கராயன்பேட்டை மேற்கு வீதியிலிருந்து தொடங்கிய பேரணி தெற்கு வீதி, கிழக்கு வீதி, வடக்கு வீதி, வழியாக கொக்கராயன்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்தது அங்கே போதைப்படியில் சிக்கித் தவிக்கும் சமுதாயத்தை மீட்டெடுப்போம், போதை பொருள்களை பயன்படுத்த வேண்டாம், போதைப் பழக்கம் போதை பொருளுக்கு எதிராக அணி திரள்வோம் என்பது உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.