நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை சங்கத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்குதொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை செயலாளர் மற்றும் சிறப்பு தலைவர் பொன்னராம் தலைமை வகித்தார்.கூட்டுறவு விற்பனை சங்க மாநில பொதுச் செயலாளர்தணிகாசலம் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டி சி எம் எஸ் என் கணேசன் அனைவரையும் வரவேற்றார் முன்னதாக டி சி எம் எஸ் வளாகத்தின் முன்பு தொழிற்சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுநாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு நகர திமுக செயலாளர்நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்,நகர் மன்ற உறுப்பினர் மகேஸ்வரி, அடுப்பு ரமேஷ், பி சி எம் எஸ் முன்னாள் உதவி பொது மேலாளர் செங்கோட்டுவேல் தொமுச கவுன்சில் நாமக்கல் மாவட்டம் கபடி பழனியப்பன், தொமுச நியாய விலைக் கடை மாநில தலைவர் உமா காந்தன்,ஆகியோர் உள்ளிட்ட கொண்டனர் பொதுக்குழுவில் கோவில்பட்டி சைதாப்பேட்டை, ஈரோடு, பெருந்துறை,பழனி ஊத்தங்கரை, கோபி,சத்தியமங்கலம்,மேலூர் அவிநாசி, ராசிபுரம்,வேலூர்,மதுரை, நாமக்கல் சிவகாசி ஆகிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை குறித்து விளக்கி பேசினார்கள்.பொதுக்குழுவில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.