தி.க. பேச்சாளரின் பேச்சை நிறுத்த சொல்லிய காவல் உதவி ஆய்வாளர் - கடும் எதிர்ப்பு
மயிலாடுதுறையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடையில் பேசிய பேச்சாளரை பேச்சை நிறுத்த சொல்லி காவல் உதவி ஆய்வாளர் கத்தியஅத்துமீறலை திமுகவினர் ஆவேசமாக தடுத்தனர்
. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் 24ம்தேதி இரவு திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தளபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், அவ்வழியாக மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை முன்னே செல்ல சுவாமி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. உடனடியாக மதிவதனி தனது பேச்சு நிறுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்தார். 5 நிமிடம் கழித்து சுவாமி ஊர்வலம் சென்ற பிறகு மதிவதினி பேசும்பொழுது சுவாமி ஊர்வலத்தில் சுவாமியை சுமப்பது நாம், பறையடிப்பது மேளம் அடிப்பது நாம், மேலே அமர்ந்து செல்வது மேல் சாதியினர் என்பதை நீங்களே பார்த்தீர்கள் என பேசினார், இதைக் கேட்ட மயிலாடுதுறை காவல் நிலைய உதவி ஆய்வளர் ஒருவர் மதிவதனி பேச்சை நிறுத்தும் படி கூறினார். இதனால் திராவிடர் கழக கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் மற்ற இயக்கத்தினர் அந்த காவல் உதவி ஆய்வாளரை சுற்றி வளைத்து சத்தம் போட்டு, ஒரு கூட்டத்தில் புகுந்து எப்படி பேச்சை நிறுத்த சொல்லலாம், பேசுவதில் தவறு இருந்தால் வழக்கு பதிவு செய்வதை விட்டுவிட்டு இங்கு வந்து எப்படி தகராறு செய்யலாம் என ஆவேசப்பட்டு காவல் துறை உதவி ஆய்வாளரை விரட்டினர். அருகில் இருந்த காவலர்கள் அவரை அப்புறப்படுத்தினர். உதவியாய்வாளர் பேச்சாளரை நிறுத்த சொல்லிய வீடியோவை வெட்டி எடுத்துவிட்டு மற்ற காட்சிகளை வாட்சப்பில் விட்டு அது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை யினரோ தி.க, திமுகவினரோ புகார் அளிக்கவில்லை.