மோகனூர் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன் கோயிலில் உழவாரப்பணி!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, ஆரியூர் அருள்மிகு பாமா ருக்மணி சமேத நந்தகோபால கிருஷ்ணன் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது. ஆரியூர் தொழில் அதிபர் செல்வமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

Update: 2024-08-25 15:41 GMT
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள பழமையான கோவில்களில் தொடர்ந்து உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, ஆரியூர் அருள்மிகு பாமா ருக்மணி சமேத நந்தகோபால கிருஷ்ணன் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது. ஆரியூர் தொழில் அதிபர் செல்வமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் வரவேற்றார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் மு.ஆ. உதயகுமார், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அருணாசலம், ஆரியூர் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜாகண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டனர்.நாமக்கல் கிரீன்பார்க் கல்வி நிறுவன இயக்குனர் குருவாயூரப்பன், கோயில் தல வரலாறு குறித்து பேசினார். தொடர்ந்து, கோயில் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் கோயில் வளாகத்தை சுற்றிலும், பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை டாக்டர் ஜனார்த்தனன், நாமக்கல் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் முருகேசன் உள்ளிட்ட திரளான ஆன்மீக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Similar News