ஆண்டிபட்டியில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான பயிலரங்கம் நடைபெற்றது

அரசியல்

Update: 2024-08-25 17:20 GMT
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பாஜக சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற பாஜகவின் ஆண்டிபட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது .இதில் பாஜக பிரமுகர் அஜித் இளங்கோ பங்கேற்று புதிய உறுப்பினர்களை எவ்வாறு சேர்ப்பது என்பதை குறித்தும் பாஜக கட்சி வளர்ச்சிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வில் ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்

Similar News