ராமநாதபுரம் ரேஷன் அரிசி கடத்திய குற்றவாளிகள் தப்பி ஓட்டம்
சாயல்குடி அருகே 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், கடத்த பயன்படுத்த டாடா சுமோ கார் பறிமுதல், குற்றவாளிகள் தப்பி ஓட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் கடற்கரை தரவைப் பகுதியில் டாடா சுமோ கார் ஒன்று நீண்ட நேரமாக அப்பகுதியில் நிற்பதாக வாலிநோக்கம் கடலோர பாதுகாப்பு குழுமத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடத்தல் பொருட்கள் எதுவும் கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடலோர பாதுகாப்பு போலீசார் அந்த சுமோ காரை சோதனை இட்டதில் கார் பழுதாகி அதில் 35 மூட்டைகளில் 1400 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு புசார்பு ஆய்வாளர் தலைமையில் தலைமை போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து அதில் இருந்த ரேஷன் அரிசியை கடலாடி நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளியை தேடி வருகின்றனர்.