திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள கூடல் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் பூப்பந்தாட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், 2024ஆம் ஆண்டுக்கான திருநெல்வேலி மாவட்ட சப் ஜூனியர் பூப்பந்தாட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கும் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சௌந்தரராஜன் கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, செல்வராஜ், லாசர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.