வட்ட மலையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
காங்கேயம் அடுத்த வட்டமலையில் கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது 1 கிலோ 100 கிராம் பறிமுதல் செய்த மதுவிலக்கு காவல்துறையினர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வட்டமலையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர் அப்போது வட்டமலை அருகே தனியார் மில் பேருந்து நிறுத்தும் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வட மாநில வாலிபரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சாந்துமகாஜன் (வயது 27) என்பதும் அவரிடம் 1கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இவர் திருப்பூரில் உள்ள தேவராம்பாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வடமாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.