மண் கடத்திய இயந்திரத்தை பிடித்து கொடுத்தும் தப்ப விட்ட அதிகாரிகள்; விவசாயிகள் புகார்

மண் கடத்திய இயந்திரத்தை பிடித்து கொடுத்தும் தப்ப விட்ட அதிகாரிகள்; விவசாயிகள் புகார்

Update: 2024-08-26 07:10 GMT
மண் கடத்திய இயந்திரத்தை பிடித்து கொடுத்தும் தப்ப விட்ட அதிகாரிகள்; விவசாயிகள் புகார் புன்செய்புளியம்பட்டி அடுத்த மாதம்பாளையம் மாராயிபாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது. மீதி நிலங்களில் கிராவல், செம்மண்ணை உரிய அனுமதியின்றி வெட்டி எடுத்தனர். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள், மக்கள், கடந்த, 20ல் அங்கு சென்றனர். மண்வெட்டி எடுத்துக் கொண்டு சிறைப்பிடித்து, வரு வாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறி யதாவது குட்டை மற்றும் மேய்ச்சல் நிலங்களில் கிராவல், செம்மண்ணை கடத்தி, செங்கல் சூளைக்கு ஒரு லோடு, 8,000 ரூபாய்க்கு மேல் விற்கின்றனர். அனுமதி சீட்டை கேட்டால், மொபைலில் காட்டுகின்றனர். அதில் அகையெழுத்தை போலியாக போட்டுள்ளனர். மண் கடத்தலில் ஈடுபட்ட ஹிட்டாச்சி" ஆர்.ஐ..ரகுநாதன், இயந்திரத்தை, மாதம்பா ளையம் வி.ஏ.ஓ., சபரியிடம் ஒப்டைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. போலீசா ரிடம் கேட்டால் வருவாய்த் துறை புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்கின்றனர். மண் கடத்திய ஹிட்டாச்சி இயந்தி ரத்தையும் அதிகாரிகள் தப்பவிட்டுள்ளனர். இவ்வாறு கூறினர்.

Similar News