மதுபோதையில் ஆம்னி பேருந்தை இயக்கிய ஓட்டுனர்.
போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
பல்லடம் அருகே தனியார் பேருந்தை மது போதையில் ஒட்டி வந்த டிரைவரை சிறைபிடித்த பொதுமக்கள்... மது போதையில் வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்ய பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு... நேற்று இரவு பொள்ளாச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பேருந்து தாறுமாறாக ஓடியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பேருந்து நிறுத்தி ஓட்டுனரை சிறைபிடித்து அவரை சோதனை மேற்கொண்டதில் ஜூஸ் பாட்டிலில் மதுவை கலந்து வைத்திருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் விஜிகுமார், ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் ஓட்டுநர் வெங்கடாஜலபதி மது போதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல்துறை கண்காணிப்பாளர் விஜிகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மது போதையில் தனியார் பேருந்தை தாறுமாறாக இயக்கி வந்த ஓட்டுநரை சிறை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.