தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும் கனமழையும் பெய்து வந்தது . இதே போல் ஆண்டிபட்டி பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையில் விவசாயிகள் தற்பொழுது கோடை உழவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் புரட்டாசி மாதத்தில் விதைப்பு பணிகள் நடைபெறுவதால் தற்பொழுது ஜீ. உசிலம்பட்டி எரதிமக்காள்பட்டி,ராமலிங்கபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்போது கோடை உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்