காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 103ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு முலவர் உற்சவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்

Update: 2024-08-26 11:26 GMT
மயிலாடுதுறை ரயிலடி மேலஒத்தசரகு தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலயமான ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 103 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஶ்ரீகாளிங்க நர்த்தன வடிவில் உள்ள கிருஷ்ணன் மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், மற்றும் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்தது பக்தர்களை கவர்ந்தது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை குழந்தை கிருஷ்ணன் மலர் தொட்டியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Similar News