வட்டமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர் கைது
வட்டமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர் கைது
வட்டமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர் கைது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு காவல் துறையினருக்கு வட்டமலை அணை அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுவிலக்கு காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடமான வட்டமலை அணை அருகே உள்ள மில் பஸ் ஸ்டாப் அருகே மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையில் மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்தப் மில் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபரை பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. வடமாநில வாலிபரை தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வடமாநில வாலிபர் தனது பெயர் சாந்து மகாஜன் வயது 27 என்பதும் தெரியவந்தது. இவர் வெஸ்ட் பெங்கால் மாநிலத்தைச் சேர்ந்த பிரந்தா மகாஜன் என்பவரது மகன் சாந்து மகாஜன் என்பதும் தெரியவந்தது. இவர் தற்போது திருப்பூரில் உள்ள தேவாரம் பாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. இவர் வடமாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார். இவர் மீது வழக்கு பதிவு செய்து சாந்து மகாஜன் என்பவரை காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.