அலங்கியம் ரோட்டில் பள்ளம் நெடுஞ்சாலை ஊழியர்கள் சீரமைப்பு
அலங்கியம் ரோட்டில் பள்ளம் நெடுஞ்சாலை ஊழியர்கள் சீரமைப்பு
அலங்கியம் ரோட்டில் பள்ளம் நெடுஞ்சாலை ஊழியர்கள் சீரமைப்பு தாராபுரம் அருகே ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.நெடுஞ்சாலை துறை சீரமைத்தனர். தாராபுரம் பகுதியில் இருந்து அலங்கியம் வழியாக பழனி செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோடு தாராபுரத்தில் இருந்துசீதக்காடு பகுதிதாண்டி அலங்கியம் எஸ் ப் வளைவு நடுவே ரோட்டில் சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் டூவிலரில் செல்பவர்கள் அவதி அடைந்து வந்தனர். இந்தச் ரோட்டை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அலங்கியம் ரோட்டில் உள்ள எஸ் வளைவு அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோட்டைசீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனால் டு வீலரில் வருபவர்கள்மற்றும் பொதும க்கள் நிம்மதி அடைந்தனர்.படம் சீரமைப்பு படவிளக்கம் தாராபுரம் அருகே அலங்கியம் எஸ்.வளைவு பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.