ஆரணி பகுதி கிருஷ்ணர் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா.

ஆரணி, ஆக 26. ஆரணி பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி உலா சென்றது.

Update: 2024-08-26 15:39 GMT
சேவூர். ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராதா ருக்மணி ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் உறியடி திருவிழா நடைபெற்றதில் இளைஞர்கள் கலந்துகொண்டு உறியடித்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அரியப்பாடி. ஆரணி அடுத்த அரியப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால் ஸ்வாமி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுவாமிக்கு தாலாட்டு நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் உறியடி மற்றும் வழக்கு மரம் ஏறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், கோகுலம் பாய்ஸ் இளைஞரணி மற்றும் விழாக்குழுவினர் செய்தனர். முனுகப்பட்டு. ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி முன்னி்ட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் பிற்பகல் நேரத்தில் சுவாமி திருவீதி உலா சென்றது. இதில் குழந்தைகள் ராதா ருக்மணி வேடமிட்டு கோலாட்டத்துடன் வீதி உலா சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Similar News