நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மாரியம்மன் கோவிலில் தங்க தாலி திருடிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை காவல்துறை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மாரியம்மன் கோவிலில் தங்க தாலி திருடிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை காவல்துறை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மாரியம்மன் கோவிலில் தங்க தாலி திருடிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை காவல்துறை..... நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது தூதூர்மட்டம் கெரடா லீஸ் இந்தப் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சாமியின் கழுத்தில் இருந்த தங்க தாலியை யாரோ மர்மநபர்கள் திருடி விட்டதாக ஊர் பொதுமக்கள் சார்பாக கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து குன்னூர் டிஎஸ்பி குமார் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர், அன்பரசு, தலைமையில் சப், இன்ஸ்பெக்டர், இளையராஜா, மற்றும் தனிப்படை காவலர்கள் மகேஷ், கணபதி, மற்றும் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ், மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் ரமேஷ், ஆனந்த், பாட்ஷா, அடங்கிய குழுவினர் குற்றவாளியை தேடி வந்தனர் இந்நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருடிய மணி என்ற வெள்ளையன் 49 என்பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது வெள்ளையன் ஏற்கனவே கொலக்கம்பை பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் குடியிருந்ததாகவும் பல குற்ற வழக்குகளில் ஏற்கனவே சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கோவிலில் திருடியது நான்தான் என்று ஒப்புக்கொண்ட நிலையில் மணி என்ற வெள்ளையனை கைது செய்து குன்னூர் குற்றவியல் நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.