ஆண்டிபட்டியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராஜபாண்டியன் பங்கேற்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து மாறுவேட போட்டியில் பங்கேற்று கிருஷ்ணர் ராதை போன்று நடித்துக் காட்டினார்கள் .இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தேனி மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராஜபாண்டியன் பங்கேற்று பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்