அண்ணாமலை உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர்!

அண்ணாமலை உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர் - விளாத்திகுளத்தில் பரபரப்பு!.

Update: 2024-08-27 03:03 GMT
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக அதிமுக - பாஜக இடையே வார்த்தைப்போர் முற்றிவரக்கூடிய சூழ்நிலையில் இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்துவந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையான வார்த்தைகளால் பயன்படுத்தி விமர்சனம் செய்தும், அதிமுக கட்சியை இழிவு படுத்தியும் பேசியிருந்தது அதிமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எதிர்த்து அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், நகர செயலாளர் மாரிமுத்து, எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சுரேஷ் குமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் பாண்டியராஜன், சண்முகச்சாமி, ஆனந்த், கணேசன், இலந்தைகுளம் ரவி சங்கர், ராஜாமணி, பேரூராட்சி பிரியா, சாந்தி, ஆறுமுகத்தாய் மற்றும் எட்டையபுரம் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News