குளிர்பானங்கள் தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு : பிஜேபி கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கலர் குளிர்பானங்கள் தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கலர் குளிர்பானங்கள் தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் சில கம்பெனிகள் கலர் குளரிபானங்கள் தயாரித்து அனைத்து கடைகளிலும் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். மலிவான விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் மிக ஆர்வமாக வாங்கி குடிக்கிறார்கள். அந்த குளிர்பானங்களில் அளவிற்கு அதிகமாக கலர் எசென்ஸ் மற்றும் கேஸ் நிரப்பப்பட்டு உள்ளதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. ஆகையால், பொது மக்களுக்கு தரமான குளிர்பானங்கள் தயாரித்து வழங்கப்படுகிறதா? என்பது குறித்து குளிர்பானங்கள் தயாரிக்கும் கம்பெனிகளை மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.