ராமநாதபுரம் பள்ளி அருகே உள்ள ஆபத்தான கால்வாய்
திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே புதிதாக கட்டப்பட்ட கால்வாய் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே புதிதாக கட்டப்பட்ட கால்வாய் உடைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொதுமக்களுக்கும் ஆபத்தான முறையில் இருந்து வருகிறதுஆறு மாதத்திற்கு முன்பாக போடப்பட்ட தரமற்ற தரைமட்ட உபகரணங்களை வைத்துப் போட்டதால் உடைந்து உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் அரசு போக்குவரத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்லும் இடமாக இருப்பதால் தரமற்ற மோடிகளை அமைத்து ஒப்பந்தக்காரர் மீது முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.