திருமணமான பெண்ணிடம் பழகியதால் ஆத்திரம் வாலிபரை தாக்கி காரில் கடத்திய மூன்று பேர் கைது

நத்தக்காடியூர் அருகே திருமணமான பெண்ணிடம் பழகியதால் வாலிபரை தாக்கி காரில் கடத்திய மூன்று பேரை காவல்துறை கைது செய்தனர் மேலும் மூன்று பேர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை வலை வீசி தேடி வருவதாகவும் தெரிவித்தனர்

Update: 2024-08-27 04:49 GMT
நத்தக்காடையூர் புதுசக்கரபாளையத்தை சேர்ந்தவர் கௌரிசங்கர் (வயது 28) சிவன்மலையில் ஒரு தனியார் டிரஸ்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த பெண்ணின் கணவர் கௌரிசங்கரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி நத்தக்கடையூர் ஓடைகாட்டை சேர்ந்த மகேந்திரன் அவரது தம்பி மூர்த்தி மற்றும் திலீப் உமேஷ்,சேது, சின்னராசு ஆகிய 6 பேரும் கௌரிசங்கர் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி ஒரு காரில் கடத்திச் சென்றனர். இதைத்தொடர்ந்து கௌரிசங்கரின் குடும்பத்தினர் வேறு ஒரு காரில் பின்னல் துரத்திக் கொண்டு சென்ற போது மகேந்திரன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் வெள்ளோடு தொட்டியபாளையத்தில் காரை நிறுத்தி சாலையோரத்தில் கௌரிசங்கரை இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த கௌரிசங்கர் காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து மகேந்திரன், மூர்த்தி, திலீப் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் உமேஷ், சேது, சின்னராசு ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Similar News